இன்றைய நாள் உங்களுக்கு எப்படி (11.11.2019)

மேஷம்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காணவேண்டிய நாள். அருகில் உள்ளவர்கள் ஆதாயம் தரும் தகவலைத் தருவர். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். புதியவர்களின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும். 

ரிஷபம்
கோவில் வழிபாட்டால் குதூகலம் காணவேண்டிய நாள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணைபுரிவர். தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும்.

மிதுனம்
செல்வ வளம் பெருக சிவபெருமானை வழிபடவேண்டியநாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் பதவிமாற்றம் பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும்.

கடகம்
குடும்பப் பொறுப்புகள் கூடும் நாள். வருவாய் திருப்தி தரும். கொடுத்த வாக்கைக்காப்பாற்றகொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடலாம். அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் வந்துசேரும்.

சிம்மம்
எம்பெருமான் வழிபாட்டால் இனிமை காணவேண்டிய நாள். பங்குதாரர்களை மாற்றும் சூழ்நிலைஉருவாகும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். எதிலும்அவசரம் காட்ட வேண்டாம். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். 

கன்னி
தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். நடக்காத ஒன்றை நினைத்துக் கவலைப்படுவீர்கள். குடும்ப பிரச்சினைகளில் யாரும் தலையிடாமல் பார்த்துக் கொள்வதுநல்லது. மருத்துவச் செலவுகளைச் சந்திக்க நேரிடும்.

துலாம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் வீட்டுப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பர். வரவு திருப்தி தரும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். பொதுவாழ்வில் பாராட்டும், புகழும் கூடும்.

விருச்சகம்
மலைவலம் வந்து மால்மருகனை வழிபட வேண்டிய நாள். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கானஅறிகுறிகள் தோன்றும்.

தனுசு
தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும் நாள். காலை நேரம் கனிவான செய்திகள் வந்துசேரும். தொழிலில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகிட்டும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

மகரம்
கிரிவலம் வந்து கீர்த்திகளை வரவழைத்துக் கொள்ள வேண்டிய நாள். ஆடை, ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மதியத்திற்கு மேல் மனதிற்கு இதமானசெய்தியொன்று வந்துசேரலாம்.

கும்பம்
எதிரிகள் உதிரியாகும் நாள். எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி கைகூடும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் அகலும். முக்கியஸ்தர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவி செய்வர். 

மீனம்
பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டைச் சீரமைக்கும் எண்ணம் உருவாகும். வராத பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். No comments

Powered by Blogger.