1 கோடியே 70 இலட்சம் வாக்காளர் சீட்டுக்கள் அச்சடிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்காக அரச அச்சகப் பிரிவினால் அச்சிடப்பட்ட வாக்காளர் சீட்டுக்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது.

அரச அச்சக பிரிவின் தலைமை அதிகாரி கங்கானி கல்பனா லியனகே இத் தகவலைத் தெரிவித்தார். 

இந்த நடவடிக்கை நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் இன்றுடன் அதனை நிறைவுக்கு கொண்டுவர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக 1 கோடியே 70 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர் சீட்டுகள் அச்சிடப்பட்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

வரலாற்றில் முதல் முறையாக அதிகளவான வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுவதால் வாக்குச்சீட்டு 26 அங்குலம் நீளமானதாக அச்சிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.