இந்த நாள் உங்களுக்கு எப்படி (05.11.2019)

மேஷம்
எதிரிகள் விலகும் நாள். தொழில் தொடர்பாக புதியவர்களின் அறிமுகம் கிடைக்கலாம். உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். 

ரிஷபம்
போட்டிகளைச் சமாளித்து வெற்றிகாணும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். நண்பர்களுடன் தொழில் ரீதியாகப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். பொருளாதார நிலை உயரும். 

மிதுனம்
தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். வாங்கல்– கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல்களை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும்.

கடகம்
வியாபார விரோதங்கள் அகலும் நாள். விடிகாலையிலேயே வரவு வந்து சேரும். இல்லம் தேடிவரும் நண்பர்கள் இனிய தகவலைத் தருவர். விரும்பிய பொருள்களை வாங்கிச் சேர்க்க முற்படுவீர்கள்.

சிம்மம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உறவினர்களின் சந்திப்பால் சந்தோ‌ஷம் அதி கரிக்கும். பழைய பாக்கிகள் திடீரென வசூலாகி பரவசப்படுத்தும். வெளியூர் பயணங்கள் திடீரெனச் செல்லும் வாய்ப்பு உருவாகும். 

கன்னி
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்புக் கொடுப்பர். கனவு பலிதம் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். 

துலாம்
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். பொதுவாழ்வில் பாராட்டும், புகழும் கூடும். எந்தக் காரியத்தையும் எடுத் தோம், முடித்தோம் என செய்து முடிப்பீர்கள். தனலாபம் தக்க விதத்தில் வந்துசேரலாம். 

விருச்சகம்
சந்தோ‌ஷ வாய்ப்புகளை சந்தித்து மகிழும் நாள். தனவரவு திருப்தி தரும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டம் வெற்றிபெறும். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும்.  

தனுசு
மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். மங்கல நிகழ்ச்சி மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். திருமணப் பேச்சுகள் முடிவாகலாம்.  

மகரம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறா விட்டாலும், திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். மருத்துவச் செலவுகள் தவிர்க்க முடியாததாக அமையும். 

கும்பம்
நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாள். இடமாற்றம், தொழில் மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு.

மீனம்
யோகமான நாள். குடும்ப வருமானத்தை உயர்த்தப் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியுலகத் தொடர்புகள் விரும்பும் விதத்தில் அமையும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்தணைவர்.  



No comments

Powered by Blogger.