யாழ்தேவியில் யாழ்ப்பாணம் சென்ற மகேஷ் சேனாநாயக்க

தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக நேற்று புகையிரதத்தில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற யாழ்தேவி புகையிரதத்தில் அவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, பிரதேசவாசிகளால் மகேஷ் சேனாநாயக்க வரவேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புகையிரதத்தில் பயணிக்கும் போது ஜனாதிபதி வேட்பாளரின் ஆதரவாளர்கள் பயணிகளுக்கு மகேஷ் சேனாநாயக்கவின் தேர்தல் பிரச்சார துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.

மகேஷ் சேனாநாயக்க ஓய்வு பெறுவதற்கு முன்னர் யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதியாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.