பெருந்தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சியில் பெருந்தொகை கஞ்சாவுடன் ஒருவர் பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யாழ்வடமாராட்சி சுண்டிக்குளம் பூனைத்தொடுவாய் கடற்கரைக்கு அண்மைப்பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினை சுண்டிக்குளம் பொலீசாருக்கு பளை பொலீசார் அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுண்டிக்குளப்பொலிசார் கடற்கரைக்கு அண்மையில் பொதிகள் இறக்கிக்கொண்டு இருந்ததை அவதானித்ததை அடுத்து இந்த இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இவர்களிடம் இருந்து கஞ்சா பொதிகளையும் படகு ஒன்றினையும், பளை பொலிசார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் கைப்பற்றி உள்ளனர். கைது செய்யப்பட்டவர் கற்பிட்டியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதாக பளை பொலிசார் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments

Powered by Blogger.