வெள்ள அனர்த்தம்; விசேட கலந்துரையாடல்

வெள்ள அனர்த்தம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறறது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) வடக்கு கிழக்கு பருவபெயர்ச்சி மழை தொடர்பிலான முன்னாயத்த கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் அனர்த்த முகாமைத்து நிலையத்தினர், பிரதேச செயலாளர்கள், முப்படையினர் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள் முப்படையினர் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.

இந்தகலந்துரையாடல் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கருத்து தெரிவித்தார். அதில், முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் காலநிலை வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் என்னவிதமான தேவைகள் ஏற்படும் என்பது பற்றி அதனை எவ்விதமாக நிவர்த்தி செய்வது என்பது தொடர்பில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பினை வழங்குவதற்கு ஏற்றவகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நிவாரண உதவிகள் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கான சமைத்த உணவுகள் உலர் உணவுபோன்றவை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினாலும், அனர்த்த நிவாரணசேவைகள் நிலையத்தினாலும் வழங்கப்படுகின்ற அதேவேளையில் ஏனைய பொருட்களை வழங்குவதற்கான ஒருசில அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்வந்துள்ளன.

அதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு சிறுகுளங்கள் மத்திய குளங்கள் காணப்படுகின்றன இவைகள் உடைப்பெடுக்கவோ அல்லது நீர்கசிவு ஏற்படுகின்ற சூழ்நிலையில் அவற்றை பாதுகாக்கவேண்டியதும் நீரை தேக்கி வைத்திருக்க வேண்டியதுமான தேவைப்பாடுகளுக்கு முப்படையினரும் உதவிகளை வழங்க முன்வந்துள்ளார்.

எனவே இவற்றுக்கான ஆயத்தங்களை செய்வதற்காக கமநலசேவைகள் திணைக்களம், நீர்பாசன திணைக்களங்களுடன் இணைந்து படையினரும் தங்கள் பங்களிப்பினை வழங்குவதற்கு ஒப்புதலை தெரிவித்தனர்.

எனினும் கடந்த காலங்களிலும் அவர்கள் முழுமையான செயற்பாடுகளை வழங்கியுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.