கண்கவர் பேஷன் ஷோ

சொக்லேட்டில் தயாரான ஆடைகளின் கண்கவர்‘ பேஷன் ஷோ’ நிகழ்ச்சி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில்,  நடைபெற்றது.

பாரீஸில் 25 ஆவது ஆண்டாக இடம்பெற்று வரும் சொக்லேட் கண்காட்சியின் ஒரு பகுதியாக இந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி இடம்பெற்றது.

இதில் 20 நாடுகளின் சாக்லேட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வித விதமான ஆடைகளை அழகிகள் அணிந்து வந்து பூனை நடை பயின்றனர்.

சொக்லேட்டுக்கு புகழ்பெற்ற பெரு, ஐவரி கோஸ்ட், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பாரம்பரிய இசை ஒலிக்க அழகிகள், சொக்லேட் ஆடைகளை அணிந்தபடி நடனமாடினர்.

சுவைமிக்க சொக்லேட்களைக் கொண்டு ஆடை அலங்கார நிபுணர்கள் உருவாக்கியிருந்த அழகிய ஆடைகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.


No comments

Powered by Blogger.