விஜய் வீட்டுக்குள் வெடிகுண்டு

விஜய் நடித்த பிகில் திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம போனில்  பேசிய நபர் விஜய் வீட்டில் குண்டு வைக்கப் பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து பொலிசார் உடனடியாக உஷார் படுத்தப்பட்டனர். நீலாங்கரையிலுள்ள விஜய்யின் வீடு, சாலிகிராமம் அபுசாலி தெருவில் இருக்கும் மற்றொரு வீடு, வடபழனி அருணாசலா ரோட்டில் விஜய்யின் தாய் ஷோபா பெயரில் இருக்கும் திருமண மண்டபம் ஆகிய 3 இடங்களிலும் பொலிசார் சோதனையில் ஈடுபட்டனர்.

ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைவில்லை. அது வெறும் வதந்தி  என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போதையில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. பிகில் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று பொலிசார் கருதினர்.

மிரட்டல் விடுத்த நபரின் தொலைபேசி எண்ணை வைத்து அவரை அடையாளம் காணும் பணி தொடங்கியது. அப்போது போரூர் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரே மிரட்டல் விடுத்திருப்பது தெரிந்தது. தொடர்ந்து அவரை பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


No comments

Powered by Blogger.