தனுசாக மாறும் ஷாருக்கான்

தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அசுரன் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க  ஷாருக்கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து திரைக்கு வந்த படம் அசுரன். படத்துக்கும், அதில் நடித்தவர்களுக்கும் பாராட்டுகளும் கிடைத்தன.  

இந்த படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அசுரன் படத்தை தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. 

இந்த நிலையில், அசுரன் படத்தை இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் பார்த்து வியந்ததாக கூறப்படுகிறது. இந்தி அசுரன் படத்தில் ஷாருக்கானே நடிக்க விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  


No comments

Powered by Blogger.