அறிமுகமாகியது காகித தொலைபேசி

டிஜிட்டல் உலகில் பயனாளர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள கூகுள் புதிய காகித தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது.கூகுள் இந்த தொலைபேசியை சமீபத்தில் அறிமுகம் செய்துவைத்துள்ளது.

 இதன் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியாது. அதேநேரம் செல்பியும் எடுக்க முடியாது.

ஒரு சின்ன துண்டுப் காகிதம் போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் காகித தொலைபேசியில் க்ரெடிட் வைத்துக் கொள்ள இருப்பிடம் உள்ளது.
மற்றபடி டிஜிட்டல் உலகில் இருந்து பயனாளரை விலக்கிவைக்க மட்டுமே இந்த தொலைபேசி உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் detox என்றால் ஒருநாள் முழுவதும் எந்தவொரு மொபைல் தொலைபேசி பயன்பாடும் இல்லாமல் இருப்பது.


இந்த காகித தொலைபேசியைப் பயன்படுத்த உங்களது தொலைபேசியில் உள்ள ஆப் ஒன்றை செயல்படுத்த வேண்டும். காகித தொலைபேசி ஆப் மூலம் உங்களது ஸ்மார்ட்தொலைபேசியில் உள்ள முக்கியத் தகவல்களைத் தேர்ந்தெடுத்து காகித தொலைபேசியில் பிரிண்ட் செய்துகொள்ளலாம்.


இதன் மூலம் அவசரத் தேவைக்கான தொலைபேசி இலக்கங்கள், குறிப்புகள் என சிலவற்றை மட்டும் நீங்கள் காகித தொலைபேசியில் பிரிண்ட் செய்து வைத்துக்கொள்ளலாம். பிரிண்ட் செய்ய ஆப் உதவும். ஸ்மார்ட்தொலைபேசி பயன்பாடு இன்றி வாரம் ஒருநாளாவது பயனாளர்கள் டிஜிட்டல் டீடாக்ஸ் செய்துகொள்வார்கள் என கூகுள் நம்புகிறது.

எனினும், இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியிலும் சிறப்பான வரவேற்பு பெற்றுவருகின்றதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.