ஹன்சிகாவுக்கு கிடைத்த தீபாவளி பரிசு

ஹன்சிகாவுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த அம்மா. விலையை கேட்டால் தலையே சுத்தும்.

பொதுவாகப் பணம் இருந்தால் எந்த பொருளை வேண்டுமானாலும் வாங்கிவிடலாம் என்று நினைப்பார்கள். ஆனால் பணம் கொடுத்தால் கூட ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குவது அவ்வளவு எளிதல்ல.

ரோல்ஸ் ராய்ஸ் வாங்க வேண்டும் என்றால் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும் நபரின் பின்னணியை விசாரிப்பார்கள். அது அந்த நிறுவனத்திற்கு திருப்தி தந்ததால் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் கார் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

கோலிவுட்டில் விஜய், தனுஷ், இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சிரஞ்சீவி, நாகர்ஜுனா,அமிதாப் பச்சன், மோகன்பாபு, பிரியங்கா சோப்ரா மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்துள்ளனர்.அந்த பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார் ஹன்சிகா. இவருக்கு நீண்ட நாட்களாக ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். 

அதனால் அவரது அம்மா, ஹன்சிகாவுக்கு தீபாவளிக்கு ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் காரை பரிசாக வழங்கியுள்ளார். இந்த காரின் விலை மட்டும் ரூ. 10 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.No comments

Powered by Blogger.