பிரபலநடிகையின் மூக்கை உடைத்த ரசிகர் கூட்டம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரியில் சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைக்க அழைத்தனர்.ஒரு அடார் லவ் படம் மூலம் பிரபலமானவர் நூரின் ஷெரீப். மலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் நூரினை கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரியில் சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைக்க அழைத்தனர்.

நூரின் வருவது குறித்து அறிந்த மக்கள் சூப்பர் மார்க்கெட் முன்பு கூடினார்கள். மாலை 4 மணிக்கு வர வேண்டிய நூரின் 6 மணிக்கு வந்தார். அவரை காண கால் வலிக்க காத்திருந்த கூட்டம் கோபம் அடைந்தது. நூரின் வந்ததை பார்த்த உடன் அவரின் காரை சுற்றி வளைத்து சத்தம் போட்டனர்.


காரில் இருந்து இறங்கிய நூரின் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். அதில் யாரோ தாக்கியதில் நூரினின் மூக்கு உடைந்தது. மூக்கை கையால் மறைத்தபடியே மேடைக்கு வந்த நூரின் அழுது கொண்டே பேசினார்.

தயவு செய்து யாரும் கூச்சலிட வேண்டாம். நான் சொல்வதை கேளுங்கள் என நூரின் அழுதார். அடிபட்ட போதிலும் அவர் கடையை திறந்து வைத்துவிட்டு தான் சென்றார். இது குறித்து நூரினின் அம்மா கூறியதாவது,

நாங்கள் கடை திறப்பு விழாவுக்காக மாலை 4 மணிக்கே கிளம்பினோம். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ, இன்னும் கூட்டம் கூடட்டும், அதன் பிறகு வாங்க என்றார்கள். நூரின் தாமதமாக வந்தததற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம் என்றார்.

கடை திறப்பு விழா நடந்த இடத்தில் வெறும் நான்கு பவுன்சர்களே இருந்ததால் அவர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்தி நூரினை பாதுக்காக முடியாமல் போய்விட்டது.

No comments

Powered by Blogger.