ஷாகிப் இல்லாதது மெகமுதுல்லாக்கு அதிஸ்ரம்

இந்தியா - பங்காளதேச அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்தத் தொடரில் விளையாடுவதற்காக பங்காளதேச அணி நேற்று டெல்லி வந்துள்ளது.

ஷாகிப் அல் ஹசன் இரண்டு ஆண்டு தடையால் விளையாட முடியாமல் போனது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஷாகிப் அல் ஹசன் இல்லாதது எங்களுக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும் என பங்காளதேச டி20 அணி கேப்டன் மெகமுதுல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மெகமுதுல்லா கூறுகையில் ‘‘ஷாகிப் அல் ஹசன் இல்லாதது எங்களை மேலும் உழைக்க உத்வேகமாக உருவாக்கும். நாட்டுக்காக விளையாடுவதை விட மிகப்பெரிய கவுரவம் ஏதும் இருக்க முடியாது. அணியை நடத்தும் பொறுப்பு எனக்குண்டு. அதனால் என்னுடைய ஒட்டுமொத்த ஆட்டத்தையும் அணிக்காக வெளிப்படுத்த முயற்சி செய்வேன்’’ என்றார்.No comments

Powered by Blogger.