நல்ல ஜனாதிபதி எமக்குக் கிடைக்க வேண்டும் - மன்னார் ஆயர்

எமது நாட்டு மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய ஒரு  உகந்த நல்ல ஜனாதிபதி எமக்குக் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் ஆசிக்கின்றோம் - இவ்வாறு தெரிவித்துள்ளார் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை.

மன்னார் மறை மாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் 'தமிழ் மக்களின் 70 ஆண்டுகள் அரசியல் பயணமும், சமகால அரசியலும்' எனும் கருப்பொருளில் மன்னார் மறைமாவட்ட குடும்ப நல பணியகத்தில்  விசேட கருத்தாய்வு நிகழ்வு இடம் பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஆயர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தல் நமக்கு அருகில் வந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நாங்கள் எமது நாட்டின் எதிர் காலத்தைப் பற்றி   நினைக்கும்போது எம்மிடம் என்ன வகையில் சிந்தனைகள் இருக்க வேண்டும்.

நாங்கள் தமிழ் மக்கள் என்ற வகையில் எமக்கு ஒரு பொறுப்பு உள்ளது.

எமது மக்களுக்காக எமக்கு ஒரு பொறுப்புள்ளது. சிங்களவர்கள் எங்கே இருக்கின்றார்கள்? தமிழ் மக்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதை நாங்கள் சரியாகப் புரிந்து கொண்டு நாம் சரியான முறையில் சிந்தனையில் வைத்து வாக்களிக்க வேண்டும்.

எமக்கு இருக்கக் கூடிய ஒரு உரிமை வாக்குரிமை. எனவே அந்த உரிமையை நாம் பயண்படுத்த வேண்டும்.

ஆனால் அதனை நாம் எப்படி பயண்படுத்துவது?சரியான முறையில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

அருட்தந்தையர்கள் நாங்கள் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். ஆனால் ஒரு கட்சிக்கோ அல்லது ஒரு நபருக்கோ வாக்களியுங்கள் என்று நாங்கள் எமது ஆலயங்களில் கூற முடியாது.

அரசியல் கூட்டங்களை எமது ஆலயங்கள் அல்லது ஆலயங்களில் உள்ள இடங்களில் நடத்த முடியாது.

அப்படியான ஒரு நிலையில் மக்கள் எவ்வாறு சிந்தித்து செயல்பட வேண்டும் என்று கூற முடியும். கத்தோலிக்க ஆயர் மன்றம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

அதைப்போல் கறிற்றாஸ், இலங்கை, செனட் சமூக பொருளாதார அபிவிருத்தி நிலையமும் ஒரு அறிக்கையை விடுத்துள்ளது.

எமது நாட்டிற்கு உகந்த ஒரு நல்ல ஜனாதிபதி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் ஆசிக்கின்றோம். ஆகையினால் அந்த ஜனாதிபதி எமக்கு பாதுகாப்பளிக்க வேண்டும்.

எமது மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும்.எமது பிரச்சினைகளை தீர்க்கக்கூடியவராக இருக்க வேண்டும்.

இப்படியாக பல கருத்துக்களை ஒருங்கிணைத்து தான் நாங்கள் எமது வாக்குகளை பயண்படுத்த வேண்டும் - என்றார்.


No comments

Powered by Blogger.