வில்லனாகும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. இந்த படம் திரைப்பட விழாக்களில் பலவிருதுகளையும் பெற்றது. 

சீதக்காதியில் முதியவராக , விக்ரம் வேதா, ரஜினிகாந்தின், விஜய் நடிக்கும் படங்களில் வில்லனாக நடிக்கிறார். அடுத்து இன்னொரு தெலுங்கு படத்திலும் வில்லன் வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு ஏஏ20 என்று பெயர் வைத்துள்ளனர். இதை தமிழிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தற்போது கடைசி விவசாயி, மாமனிதன், லாபம் ஆகிய படங்களிலும் , உப்பென்னா என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். சங்கத்தமிழன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மற்ற மொழி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன.

மர்கோனி மாதை என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்த சைரா நரசிம்ம ரெட்டி சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்தி படத்தில் நடிக்கவும் அழைப்பு வந்துள்ளது.

No comments

Powered by Blogger.