மன்னாரில் பனம் விதைகள் நட்டு வைப்பு

மன்னார் மாந்தை பகுதியில், பனம் விதைகள் நடும் செயல் திட்டம் ஒன்று இன்று காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அழிந்து வரும் பனை வளத்தைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் 
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தினால் 50 ஆயிரம்  விதைகள் நடப்படவுள்ளன.

குறித்த செயல் திட்டத்தை மாந்தை மேற்கு பிரதேச செயலர் எஸ்.கேதீஸ்வரன், கள்ளியடி கிராம சேவையாளர் பிரிவில் ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது முதற்கட்டமாக 16 ஆயிரம் பனம் விதைகள் நடுகை செய்யப்பட்டது.

நிகழ்வில் கள்ளியடி கிராம மக்கள், பாடசாலை மாணவர்கள், மாந்தை மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பனம் விதைகளை நட்டு வைத்தனர்.No comments

Powered by Blogger.