துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் மகேஸ் சேனாநாயக்க

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். 

சிவில் அமைப்புக்களின் சார்பில் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள மகேஸ் சேனாநாயக்க தனது தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக நேற்று  யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

இதற்கமைய நேற்றுப் பல இடங்களுக்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். 

இதனைத் தொடர்ந்து இன்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்திருந்தார்.


No comments

Powered by Blogger.