மகிந்த அரசு எதனையும் செய்யவில்லை - விஜயகலா

கடந்த கால அரசு யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து எதுவித அபிவிருத்தியையோ அல்லது இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பினையோ எதனையுமே செய்து காட்டவில்லை, நிரூபிக்கவில்லை.-இவ்வாறு தெரிவித்துள்ளார் - இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்

வவுனியாவில் சஜித்தின் தேர்தல் பரப்பரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,  

எங்களுடைய மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வாக்களித்து விட்டார்கள் என்பதைதான் நான் முதற்கட்டமாக இந்த இடத்திலே கூற விரும்புகிறேன். 

யார் எந்த முடிவெடுத்தாலும் தமிழ் பேசுகின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வவுனியா மாவட்டம் அல்ல வடக்கு, கிழக்கு முதல் மலையகம் தொடக்கம் கொழும்பு வாழ் மக்கள் வரை மூவின மக்களுமே சரியான முடிவை எடுத்துள்ளார்கள். 

எங்களது வாக்குகள் அனைத்தும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகிய சஜித் பிரேமதாசவிற்கு தான். அதிலும் வடக்கு, கிழக்கு, மலையக மக்களுடைய வாக்குகள் சஜித் பிரேமதாசவிற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 

நூற்றுக்கு இருபது வீதமான வாக்கை நாங்கள் அளித்து விட்டோம். அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடும் நிலையில் தன்னுடைய வாக்குகளை இருபது வீதத்திலிருந்து தான் எண்ணப் போகிறார் என்பது எங்களுடைய மகிழ்ச்சியான செய்தி. 

ஏனென்றால் கடந்த கால அரசாங்கம் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து எந்த வித அபிவிருத்தியையோ அல்லது இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பினையோ எதனையுமே செய்து காட்டவில்லை, நிரூபிக்கவில்லை. 
சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி எந்தவொரு பெரும்பான்மை இன தலைவரும் வெல்ல முடியாது என்பது வரலாறு என்றார்.


No comments

Powered by Blogger.