ஐ. தே. கட்சியின் அலுவலகம் மீது தாக்குதல்

எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகம் ஒன்று அடையாளம் தெரியாத குழுவினால் தாக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக இரத்தினபுரி எஹலியகொட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகமே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அலுவலகத்தின் கண்ணாடிகள் மற்றும் உபகரணங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன் அலுவலகத்திற்கு தீயிட்டும் கொளுத்தப்பட்டுள்ளது.
No comments

Powered by Blogger.