தழிழரைப் புறந்தள்ளும் சஜித் மற்றும் கோத்தபாய

தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் சஜித் பிரேமதாச “தமிழர் தரப்புடன் எந்தவொரு உடன்படிக்கைக்கும் செல்லமாட்டேன்” என்றும் கோத்தபாய ராஜபக்ச “தமிழர் நலன்கள் சார்ந்து முன்வைக்கப்படும் எந்தவொரு நிபந்தனையையும் ஏற்கமாட்டேன்” என்றும் கூறி தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறந்தள்ளியுள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளது தமிழ்த் தேசிய முன்னணி.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைத் தீவில் கடந்த பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானதாகும்.  அந்த நோக்கில் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தீரக்கமான முடிவுகளை எடுத்து பேரம்பேச வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

இத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவும் பொறுப்புக் கூறல் தொடர்பாகவும் ஏற்கனவே தமது உத்தியோகபூர்வமான நிலைப்பாடுகளை
வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களில் சிறிலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச – “தமிழர் நலன்கள் சார்ந்து
முன்வைக்கப்படுகின்ற எந்தவொரு நிபந்தனையையும் ஏற்கமாட்டேன்” என்றும் ஜனநாயக தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிறேமதாசா “தமிழர் தரப்புடன் எந்தவொரு உடன்படிக்கைக்கும் செல்லமாட்டேன்” என்றும் கூறி தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறந்தள்ளியுள்ளனர்.

குறிப்பாக ஒற்றையாட்சித் தீர்வைத் தவிர வேறு எதற்கும் தாம் இணங்க மாட்டோம் எனவும் ஏற்கனவே உள்ள ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கம் மட்டுமே தமக்கு
உண்டெனவும் வேண்டுமானால் ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை பரவலாக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளனர். 

சமஸ்டி என்பதனை அடியோடு நிராகரிப்பதாகவும் அனைத்துத் தரப்புக்களும் கூறியுள்ளனர். இதற்கு மேலதிகமாக இது ஓர் சிங்கள பௌத்த நாடு என்பதனையும் அதன் அடையாளத்திற்கு எந்தவொரு
பாதிப்பும் ஏற்படாத வகையில் தாம் செயற்படுவோம் எனவும் இலங்கை படைத்தரப்புக்கள் போர் வீரர்கள் என்றும் அவர்களை எந்தவொரு நீதிமன்றின் முன்னாலும் நிறுத்த மாட்டோம்
என்றும் அவர்களைப் பாதுகாப்பது தங்களது தார்மீகக் கடமை என்றும் அவர்களது கௌரவத்தை தாம் நிலைநாட்டுவோம் என்றும் கூறியுள்ளனர்.

மேற்படி கொள்கைகளை அவர்கள் நடைமுறைப்படுத்தும்போது தமிழ்த் தேசத்தின் மீதான கட்டமைப்புசார் இனவழிப்பு மேலும் தீவிரமடையும் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. இந்தக் கொள்கைப் பிரகடனங்கள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ்  மக்களாகிய நாம் இத்தேர்தலில் இவர்களுக்கு வாக்களிப்பதால் எந்த நன்மையும் அடைந்துவிடப் போவதில்லை என்பது வெளிப்படையானது.

இந்நிலையில் இத்தேர்தலில் கலந்துகொண்டு மேற்குறித்த நிலைப்பாடுகளையுடைய பிரதான வேட்பாளர் எவருக்காவது வாக்களிப்பதானது தமிழ்த் தேசம் தனது அடிப்படை நிலைப்பாடுகளைக் கைவிட்டு சிங்கள பௌத்தத்தினுள் கரைந்து செல்லத் தயார் என்பதான தவறான செய்தியை உலகத்திற்கு வழங்குவதாக அமையும்.

இப் பின்னணியிலே  தமிழ்த் தேசம் இந்தத் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காது புறக்கணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதே தவிர மாற்று வழிகள் எதுவுமே கிடையாது.

ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காது புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை கோருகின்றோம். புறக்கணிப்பை கைவிட்டு வாக்களிக்க வேண்டுமானால்! தேர்தல் புறக்கணிப்பு முடிவை தமிழ் மக்கள் கைவிட்டு தமக்கு வாக்களிக்க வேண்டும் என யாராவது பிரதான வேட்பாளர்கள் விரும்புவார்களாக இருந்தால் அத்தரப்பும் அத்தரப்பினை ஆட்சிக்குக் கொண்டுவர விரும்பும் சர்வதேச வல்லரசுகளும் பின்வரும் கோரிக்கைகளை சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டும்.
என்றுள்ளது.
No comments

Powered by Blogger.