எமது முடிவை நிதானமாக சிந்தித்தே அறிவிப்போம் –சுமந்திரன்


வடக்குக், கிழக்குத் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் தாமே என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சரியான வேட்பாளரை முறையாக இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய தமது கடமை என்றும்  அதனால், தமது முடிவை நிதானமாக சிந்தித்தே அறிவிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்மராட்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “பல்கலைக்கழக மாணவர்கள் 6 கட்சிகளை ஒன்றிணைத்தனர். அதில் ஒரு கட்சி தேர்தலை புறக்கணிக்கும்படி கூறிவிட்டு விலகியுள்ளது.

வடக்கு – கிழக்கில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த 16 பேர் உள்ளனர்.

இந்த நிலையில், மக்கள் தம்மைத் தெரிவுசெய்துள்ள நிலையில் அவர்களுக்கு பொறுப்புடன் கடமையாற்றவேண்டியது எமது கடமை. நாம் எமது முடிவை நிதானமாக சிந்தித்தே அறிவிக்கவேண்டும்” என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.