எட்டில் வெளியாகும் பட்லர் பாலு

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பட்லர் பாலு’ திரைப்படம் எதிர்வரும் 8 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது "பட்லர் பாலு" எனும் படத்தில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்  யோகிபாபு. 

இப்படத்தை இயக்குநர்  சுதிர்.M.L இயக்க யோகிபாபுவோடு, இமான் அண்ணாச்சி, மயில்சாமி, ரோபோசங்கர், தாடிபாலாஜி ஆகியோரும் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை அடித்தளமாக கொண்ட இப்படத்தில் யோகிபாபுவிற்கு கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையல் காரர் வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.


No comments

Powered by Blogger.