ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அலுவலக வளாகத்தில் பிற்பகல் 2.00 மணி தொடக்கம் சாட்சி விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் செயலாளர் எச்.எம்.பீ.பீ.ஹேரத் தெரிவித்தார்.

இந்த சாட்சி விசாரணைகளை பொதுமக்களுக்கு மற்றும் ஊடகவியலாளர்களுக்கு பகிரங்கப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் செயலானர் மேலும் தெரிவித்தார்.
No comments

Powered by Blogger.