துக்க நிகழ்வில் பரிமாறப்பட்ட கேக்

துக்க நிகழ்வில் பங்கேற்க வந்தவர்களுக்கு போதையூட்டும் ‘கேக்’ தவறுதலாக பரிமாறப்பட்ட சம்பவமொன்று ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

இறந்தவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்னர் அதில் பங்கேற்க வந்தவர்களுக்கு விடுதி ஒன்றில் வைத்துக் ‘கேக்’கும், தேநீரும்  பரிமாறும் கலாசாரம் ஜேர்மனியில் உள்ளது.

அந்த வழக்கப்படி ஒரு துக்க நிகழ்வில் பங்கேற்க வந்தவர்களுக்கு வீதாகென் என்ற இடத்தில் உள்ள விடுதியில் ‘கேக்’ மற்றும் தேநீர் பரிமாறப்பட்டது.

இதனால், அவற்றைச் சாப்பிட்ட 13 பேருக்கு குமட்டலும், தலைச் சுற்றலும் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

தகவலறிந்த பொலிஸார்,  நடத்திய விசாரணையில், மற்றொரு நிகழ்ச்சிக்காக தயாரான போதையூட்டும் ‘கேக்’ தவறுதலாக துக்க நிகழ்வில் பங்கேற்க வந்தவர்களுக்கு பரிமாறப்பட்டமை தெரிய வந்தது.

இது தொடர்பாக விடுதி உரிமையாளரின் மகளிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.