கோத்தபாயவுக்கு ஆதரவாக ஹசன் அலி மற்றும் பஷீர்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலர் அமைச்சர் ஹசன் அலி மற்றும் முன்னாள் கட்சி அமைச்சர் பஷீர் செகுதாவூத் முடிவு செய்துள்ளனர்.

சிறிலங்கா முஸ்லிம் காஙகிரஸின் பல உறுப்பினர்கள் எதிர்வரும் நாள்களில் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்கப்பட வேண்டிய வேட்பாளர் குறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கரஸ் கட்சியில் பரபரப்பான விவாதம் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


No comments

Powered by Blogger.