தீப்பிடித்த தொடருந்து ; பயணிகள் பலர் உயிரிழப்பு

தொடருந்து தீப்பிடித்து எரிந்ததில் 16 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் கராச்சி-ராவல்பிண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் தேஸ்காம் எக்ஸ்பிரஸ் தொடருந்தே இவ்வாறு தீப்பிடித்து எரிந்துள்ளது.

குறித்த தொடருந்து இன்று காலை ரகிம் யார் கான் அருகே உள்ள லியாகத்பூரில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெட்டியில் திடீரெனத் தீப்பிடித்தது. 

காற்றின் வேகத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அருகில் உள்ள பெட்டிகளுக்கும் தீ பரவியது.

இதையடுத்து தொடருந்து நிறுத்தப்பட்டு, தீப்பிடித்த பெட்டிகளில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். சிலர் தீயில் சிக்கிக்கொண்டனர். 

சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர்  தீயைக் கட்டுப்படுத்தி உள்ளே சிக்கியவர்களை மீட்டனர்.

விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 13 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.


No comments

Powered by Blogger.