மகளை கிண்டல் செய்தவரை விளாசிய குஷ்பு

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு எழுத்தாளராக ஆசை. இளைய மகளுக்கு அப்பா வழியில் இயக்குநர் ஆக விருப்பம்.

குஷ்பு தீபாவளி கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு என் பேபி டால் அனந்திதா சுந்தர் என்று தெரிவித்திருந்தார்.

அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குஷ்புவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பதாக பாராட்டினார்கள். ஆனால் ஒரு சிலர் அனந்திதாவின் உருவத்தை வைத்து கேலி செய்தனர்.

தன் செல்ல மகளை கிண்டல் செய்த நபரை விளாசியுள்ளார் குஷ்பு.
ஒருவர் கெட்ட வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். அதை பார்த்த குஷ்ப்புவுக்கு கோபம் வந்து பேசிவிட்டார்.

ன்னி முதலில் உன் மூஞ்சியை கண்ணாடில பாரு நாய் கூட பார்க்காது வாந்தி எடுத்துட்டு போயிடும் என்றார். இதையடுத்து அந்த நபர் தன் ட்வீட்டை நீக்கிவிட்டார்.

தன் பிள்ளையை கிண்டல் செய்தால் எந்த தாய்க்கும் கோபம் வரும். அப்படித் தான் குஷ்புவுக்கும். அனந்திதாவை உருவக் கேலி செய்த நபரை நெட்டிசன்களும், திரையுலக பிரபலங்களும் பேசியுள்ளனர்.

குஷ்புவின் மகளை கெட்ட வார்த்தையால் கிண்டல் செய்த நபரின் புகைப்படத்தை திமுக எம்.பி. செந்தில்குமார் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கேவலமாக கமெண்ட் போட்ட அந்த நபரை பணியமர்த்தியுள்ள நிறுவனம் அவர் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்கும்படி தயவு செய்து அறிவுரை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

செந்தில்குமாரின் ட்வீட்டை குஷ்பு ரீட்வீட் செய்துள்ளார். ஒரு தாயாக குஷ்புவுக்கு ஏற்பட்டுள்ள கோபம் நியாயமானதே. கடவுளின் படைப்பில் அனைவரும் அழகானவர்கள். உருவத்தை வைத்து யாரையும் கேலி செய்வது மிகவும் தவறு.


No comments

Powered by Blogger.