மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப் பகிஸ்கரிப்பு

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகளும் இன்று  ஒரு நாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

நீதிமன்ற தடை உத்தரவை மீறி செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில்  கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.

இதன் போது பொதுமக்கள் மீதும் சட்டத்தரணிகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவங்களைக் கண்டித்து மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

மன்னார் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரனைகளுக்காக வந்த மக்கள் திரும்பிச் சென்றுள்ளதோடு, இன்றைய தினம் இடம் பெறவிருந்த வழக்கு விசாரணைகள் பிரிதொரு தினத்திற்கு திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.