வவுனியாவிலும் சட்டத்தரணிகள் பணி புறக்கணிப்பு

வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று மேற்கொண்டுள்ள  சேவைப் புறக்கணிப்பு நடவடிக்கைக்கு வவுனியா மாவட்ட சட்டதரணிகளும் தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இதனால் வவுனியா மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு வழக்குகளுக்காக நீதி மன்றுக்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் அசௌகரியங்களை சந்தித்தித்தனர்.

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்குத் துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தியும், சட்டத்தரணி கே.சுகாஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியுமே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.






No comments

Powered by Blogger.