ஆணைக்குழு முன்னிலையில் சஜித்

அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அமைச்சர் சஜித் பிரேமதாச முன்னிலையாகியுள்ளார்.

வீடமைப்பு அதிகார சபைக்கு சட்ட விரோதமான முறையில் ஆட்களை சேர்த்துக் கொண்டமையின் ஊடாக ஏற்பட்ட மோசடிகள் தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்காகவே அமைச்சர் சஜிம் பிரேமதாஸ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையாகி உள்ளார்.

அதேபோல், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டீ.எம் சுவாமிநாதனும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.