இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா - வடக்கு ஆளுநர் சந்திப்பு

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா.

இந்த சந்திப்பு நேற்றைய தினம் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

வடக்கில் உள்ள தனியார் நிலங்களை முடிந்தவரையில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இராணுவத் தளபதியிடம் ஆளுநர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

போருக்குப் பின்னரான வடக்கின் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

கடந்த 2015 ஆண்டுக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரின் நடவடிக்கைகளில் மாற்றங்களைக் காண முடிவதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments

Powered by Blogger.