வவுனியாவிலும் ஆதரவு ; அசௌகரியத்தில் மக்கள்

சம்பளம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகளை முன்னிறுத்தி  அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் சுகவீன விடுமுறைப் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

அரச நிர்வாக அமைச்சினால் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் கொடுப்பனவை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இப் போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகிறது.

தொழிற்சங்க நடவடிக்கைக்கு, கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச முகாமைத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட 18 தொழிற் சங்கங்களின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதேவேளை தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலும் இன்றையதினம் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கபட்டுள்ளது.

வவுனியா மாவட்டசெயலகம், மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் பல்வேறு உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று கடமைக்கு சமூகமளிக்கவில்லை.

இதனால்  சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதேச செயலாக்கங்களுக்கு வருகை தந்த பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர். 

இதேவளை வாகன அனுமதிப் பத்திரம் மற்றும் ஒரு சில சேவைகள் மாத்திரம் வவுனியா பிரதேசசெயலகத்தில் இடம்பெற்று வருகின்றன.










No comments

Powered by Blogger.