மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் இருவரைத் தாக்கிய சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பு நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டத்தரணிகள் இருவர் மீது பிக்குமார் தாக்குதல் மேற்கொண்டதை கண்டித்து மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக முன்னாள் சட்டத்தரணிகள்  பணிப் புறக்கணிப்பிலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் என்.நாராயனப்பிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மட்டக்களப்பு நீதவான் நீதமன்றம் மாவட்ட நீதிமன்றம் , உயர் நீதிமன்றம் தொழில் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களை சோர்ந்த 40 மேற்பட்ட சட்டத்தரணிகள்  ஒன்றினைந்தனர் 

நீதிமன்ற கட்டளையை அவமதிக்காதே, சட்டத்தின் மூலம் யாவரும் சமம், நீதிக்கே சவாலா, ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே நீதி , தலையிடாதே நீதித்துறையில் தலையிடதே  போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்பாட்டத்தினால் அனைத்து நீதிமன்ற  திறந்த நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் செயலிழந்ததுடன் இன்று இடம்பெறவிருந்த திறந்த நீதிமன்றத்தில் வழக்குகள் பிறிதொரு தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments

Powered by Blogger.