நீரில் மூழ்கியுள்ள கொழும்பு வீதிகள்

நிலவும் சிரற்ற காலநிலை காரணமாக கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (23) இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, கொட்டாஞ்சேனை ஆமர் வீதி, பாபர் வீதி பிரதேசம், கொட்டாஞ்சேனை புளூமென்டல் சென் ஜேம்ஸ் வீதி, ஜிந்துபிட்டிய சந்தி மற்றும் கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள வீதிகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், ஹைலெவல் வீதி, பேஸ்லைன் வீதியின் ரொபட் குணவர்தன சந்தி மற்றும் தெமடகொட அலி தென்னா விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


No comments

Powered by Blogger.