மீனவர்கள் மூவர் கரை திரும்பவில்லை ; தொடரும் தேடுதல் நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில், மீன்பிடிக்கச் சென்ற  மீனவர்கள் மூவர்  இதுவரை கரைதிரும்பவில்லை  என அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சாய்ந்தமருது, மாளிகைக் காட்டுத் துறையில் இருந்து  இயந்திரப் படகு மூலம் சென்ற நிலையில் மூன்று நாள்களாகியும் கரை திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.  

சாய்ந்தமருதை சேர்ந்த  சீனி முகம்மது ஜுனைதின் (வயது-36) இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது-37 )  காரைதீவை சேர்ந்த சண்முகம் சிரிகிருஷ்ணன் (வயது-47) ஆகிய மீனவர்களே  இவ்வாறு கரை திரும்பவில்லை.

தகவல் தொடர்பில்,  பொலிஸ் கடற்படை ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டதுடன் மீனவ சங்கங்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மாளிகைக்காடு  கரையோர மீனவர்  பாதுகாப்பு சங்கத்தினர் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் பாதுகாப்பு மையத்திற்கு விடயம்  தொடர்பில் தகவல்கள் வழங்கி தேடி வருவதாக கல்முனை கரையோர மீனவர் பாதுகாப்பு சங்கச் செயலர்  தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.