கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கட்டுவன, ஹொரேவெல பிரதேசத்தில் பொலிஸாரின் ஆணையை மீறி பயணம் செய்த கார் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாடு ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய ஹொரேவெல பிரதேசத்தில் பொலிஸாரால் கார் ஒன்றை நிறுத்துமாறு ஆணையிட்டுள்ளனர்.

எனினும், குறித்த கார் பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்ததால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

பின்னர் குறித்த கார் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள நிலையில், அதில் இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில் திருடப்பட்ட மாடு மாத்தறை பிரதேசத்திற்கு கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

44 வயதுடைய மீ எல்ல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தப்பிச் சென்ற இருவரையும் தேடி கடுவன பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
No comments

Powered by Blogger.