வவுனியாவில் மரம் நடுகை விழா

வவுனியா தரணிக்குளம் கிராமத்தில் மரநடுகை விழா இன்றையதினம் இடம் பெற்றது. 

குறித்த பகுதியைச் சேர்ந்த சிறுவன்  கிருஸ்ணகுமாரின் மரம் நடுகையை ஊக்கிவிக்க வேண்டும் என்ற எண்ணக்கருவுக்கு வலுச்சேர்க்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவினால் இத் திட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்களின் ஆதரவோடு இடம்பெற்ற இந்த நிகழ்வில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டதோடு தரணிதீபம் விளையாட்டுக்கழத்துக்கான மைதனமும்  இதன்போது, திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில்  ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் திலீபன், கட்சியின் ஆதரவாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் கிராம  மக்க எனப் பலரும் கலந்து கொண்டனர்.










No comments

Powered by Blogger.