விமர்சனங்களுக்கு மத்தியில் சாய் பல்லவியின் நடிப்பாற்றல்

நடிகை சாய் பல்லவி தற்போது நடித்து வரும் கதாபாத்திரத்திற்கு விமர்சனங்கள் எழுந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தான் நடித்து வருவதாக கூறியுள்ளார்.

’விராட பருவம்’ என்ற திரைப்டத்தில் சாய்பல்லவியின் கதாபாத்திரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்ற நிலையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சாய் பல்லவி விராட பருவம் ’என்.சி 20’ ஆகிய இரு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விராட பருவம்’ படத்தில் பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பொலிஸ் அதிகாரிக்கும் பெண் நக்சலைட்டுக்கும் மலரும் காதலை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகிறது.

இந்நிலையில், இத்திரைப்டத்தில் சாய்பல்லவி நக்சலைட்டாக நடிப்பதற்கு  தற்போது விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.