உயிரிழந்த பிக்கு ; நீதிமன்றின் அதிரடி உத்தரவு

முல்லைத்தீவு, நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாமுக்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார்  ஆலய வளாகத்தை அபகரித்து பௌத்த விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்த விகாரையின் விகாராதிபதி கொலம்ப மேதாலங்க தேரர் கடந்த 21 ஆம் திகதி புற்றுநோயினால் உயிரிழந்தார்.

இவரது உடலை குறித்த ஆலய வளாகத்தில் தகன கிரியைகள் மேற்கொள்வதற்கு ஆலய வளாகத்தில் எதிர்ப்புத் தெரிவித்து பொலிஸார் ஊடாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு வழங்கியிருந்தது.

குறித்த வழக்கு இன்று காலை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.No comments

Powered by Blogger.