கோத்தபாயவுக்கு அதிகாரம் இல்லை -சமந்த

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மின முக்கியமானது எனவும் அதில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியை எவராலும் தடுக்க முடியாது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

பதுளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

கடந்த 2015 ஆண்டிலிருந்து சட்டம் உரிய வகையில் செயற்பட்டிருந்தால் மஹிந்த ராஜபக், கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் விமல் வீரவங்க ஆகியோர் தற்போது விளக்கமறியலில் இருந்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தற்போது பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என சமந்த வித்தியாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.No comments

Powered by Blogger.