கஞ்சாக் காடு ஒன்று சுற்றிவளைப்பு

தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்ட பலஹருவ பிரதேசத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா சேனை ஒன்று மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

சுமார் 7 அடி உயரம் கொண்ட 3000 ஆயிரத்திற்கும் அதிகமான கஞ்சா செடிகள் அங்கு பயிரிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அவற்றின் பெறுமதி 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.

கஞ்சாவினை பயிரிட்ட 39 வயதுடைய அதே பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.அனைத்து கஞ்சா செடிகளும் எரித்து அழிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முற்படுத்தபடவுள்ளார்.
No comments

Powered by Blogger.