கதாநாயகியாக கவர்ச்சி நடிகை சோனா

தமிழில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட சோனா மீண்டும் மலையாளத்தில் தயாராகும் பச்ச மாங்கா என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஆரம்ப காலத்தில் ஒன்றிரண்டு படங்களில்  கதாநாயகியாகவும் இவர் நடித்திருக்கிறார்.  பின்னர் கவர்ச்சி வேடங்கள், ஒரு பாடலுக்கு நடனம் என இதுவரை 50 படத்தை தாண்டி விட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

நான் மலையாள சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் எனக்கு திருப்பம் தரும் ஒரு படமாக பச்ச மாங்கா அமைந்திருக்கிறது. இதற்கு முன் நான் கவர்ச்சியாக நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் அடக்க ஒடுக்கமான பொறுப்புள்ள குடும்பத் தலைவியாக நடித்திருக்கிறேன். எனது ஜோடியாக பிரதாப் போத்தன் நடித்திருக்கிறார். என்றார்.



No comments

Powered by Blogger.