முல்லைத்தீவு நீதிமன்றில் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்துத் தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோயினால்  உயிரிழந்த நிலையில் அவரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வதற்கு தடைகோரி பிள்ளையார் ஆலயத் தரப்பினர் தாக்கல் செய்த வழக்கின் மீதான விசாரணை  முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்காக பொதுபல சேனாவின் பொது செயலர் கலகொட  அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் நீதிமன்றுக்கு வருகை தந்த பின்னர்  நீராவியடி பிள்ளையார் ஆலயம் நோக்கிச் சென்றுள்ளனர். 

வழக்கு விசாரணைகாக சிங்கள சட்டதரணிகள் பெருமளவானோர் நீதிமன்றில் முன்னிலையாகினர். ஆலய நிர்வாகம் சார்ப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம், மணிவண்ணன், சுகாஸ் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகியுள்ளனர்.

வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் 15 நிமிடங்கள் வழக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.






No comments

Powered by Blogger.