முல்லைத்தீவில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம்

முல்லைத்தீவு நகரில் வடக்கு-கிழக்கு சட்டத்தரணிகள் மற்றும் தமிழ் மக்கள் பலரும் இணைந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்னர்.

 முல்லைத்தீவு மருத்துவமனை முன்பாக ஆரம்பித்த கவனவீர்ப்புப் பேரணி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் முன்பாக சென்று மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது

கறுப்புத் துணிகளால் வாய்களைக்  கட்டியவாறும்  கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறும் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

சட்டம் மீறப்பட்டுள்ளமை, தமிழர்கள் மீதான அடக்கு முறை, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலக வலியுத்தல் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு – நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற உத்தரவை மதிக்காது  பௌத்த மதகுரு ஒருவரின் உடலம் தகனம் செய்யப்பட்ட சம்பவத்தை தடுக்காது மாறாக  பொலிஸார்  வேடிக்கை பார்த்ததாகவும் நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர்களுக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சட்டத்தரணி ஆலய பூசகர் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டமை என்பவற்றை கண்டித்து  இம் மொபெரும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.No comments

Powered by Blogger.