அரசுக்கெதிராக பல போராட்டங்கள் முன்னெடுப்பு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச நிர்வாக அதிகாரிகளின் ஒன்றியம் உள்ளிட்ட 17 அமைப்புகள் நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளன.

வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இப் போராட்டம் நடத்தப்படவுள்ள இப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைப்புகள் தெரிவித்தன.

இருப்பினும், பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சர் அண்மையில் ஒரு கூட்டத்தில், வேதன முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான அமைச்சரவை அறிக்கை இன்று முன்வைக்கப்படும் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே இந்த போராட்டத்துக்கான அறிவிப்பும்  விடுக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.