இராணுவச் சிப்பாய் உயிரிழப்பு

பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஹசலக, ரன்தெணிகல நீர்த்தேக்கத்திலேயே சிப்பாய் உயிரிழந்துள்ளார். 

குறித்த இராணுவச் சிப்பாய் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் நீர்த்தேக்கத்தின் கீழ் அணையை சோதனையிட்டதில் சுமார் 20 அடி ஆழத்திலிருந்து அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாவனெல்லை, அலுத்நுவர பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இராணுவச் சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மகியங்கனை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


No comments

Powered by Blogger.