மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

வெல்லவாய, மொனராகலை பிரதான வீதியின் ஆனபல்லம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

நேற்று (21) இரவு மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரில் வந்த மோட்டார் வாகனம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

22 வயதுடைய வெல்லவாய பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளான்.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்திருந்ததாக வெல்லவாய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (22) இடம்பெறவுள்ள நிலையில், மோட்டார் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.சாரதி வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


No comments

Powered by Blogger.