அமெரிக்கா செல்லப்போய் ஜெர்மனியில் இறங்கிய மோடி

டெல்லியிலிருந்து புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, அமெரிக்கா செல்லும் வழியில் ஜெர்மனியில் இறங்கியுள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்காவில் 7 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்றிரவு  புறப்பட்டுச் சென்ற அவர், வழியில் ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் அவரது விமானம் இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டது.

விமானத்திலிருந்து இறங்கிய மோடியை, ஜெர்மன் நாட்டு இந்தியத் தூதர் முக்தா தோமர், தூதரக அதிகாரி பிரதிபா பார்க்கர் ஆகியோர் வரவேற்றனர். 

ஜெர்மனியில் இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர், அவரது விமானம் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்குப் புறப்பட்டுச் சென்றது.

27 ஆம் திகதி வரை அமெரிக்காவில் தங்கியிருக்கும் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார். குறிப்பாக டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். No comments

Powered by Blogger.