வைத்தியசாலை சிற்றுழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று (25) காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக சுயாதீன சேவை சங்கத்தின் தலைவர் பிரியந்த உதயகுமார் தெரிவித்தார்.

நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் சீருடைக்கான கொடுப்பனவு உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முன் வைத்து இந்த பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாகவும் அதன் தலைவர் மேலும் தெரிவித்தார்.

நாவலப்பிட்டிய பிரதேச வைத்தியசாலையில் பணி புரிகின்ற 175 சிற்றூழியர்கள் இந்த பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

சிற்றூழியர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணமாக நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் சேவைகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

எனவே, இதேவேளை சிற்றூழியர்களின் 11கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கபட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.