சிறுமியின் உயிரை பறித்த கார்

மட்டகளப்பு - கிண்ணியா பிரதான வீதியில் உப்பாறு பாலத்துக்கு அருகாமையில் நேற்று (23) மாலை கெப் ரக வாகனமும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்த நிலையில் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலையில் இருந்து தோப்பூருக்கு சென்ற கார் ஒன்றும் மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு சென்ற விவசாய திணைக்களத்திற்க்கு சொந்தமான கெப் ரக வாகனமுமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் தோப்பூரை சேர்ந்த பாத்திமா பஹ்மிதா வயது(14) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் தோப்பூர் அந்நூர் மகா வித்தியாலயத்தில தரம் 09 இல் கல்வி கற்று வந்த மாணவி எனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர் .

கெப் ரக வாகனத்தில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வாருகின்றனர்.No comments

Powered by Blogger.